.webp)
-552614.jpg)
Colombo (News 1st) யாழ்ப்பாணம் - ஊர்காவற்றுறை - நைனாதீவில் கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நாவலப்பிட்டி பகுதியியை சேர்ந்த 45 வயதுடைய ஒருவரே கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
உயிரிழந்த நபருடன் காணப்பட்ட முரண்பாடு காரணமாகவே இந்த கொலை இடம்பெற்றுள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
சம்பவம் தொடர்பில் கொட்டகலை பகுதியை சேர்ந்த 35 வயதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தொடர்ச்சியாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
