.webp)

Colombo (News 1st) ஜிந்துப்பிட்டி பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்ததுடன் 02 சிறுவர்கள் காயமடைந்த சம்பவத்துடன் தொடர்புடைய துப்பாக்கிதாரி உடவலவ பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு மத்திய பிரிவு குற்ற விசாரணைப் பணியகத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் கொலம்பகேஆர, உடவலவ பகுதியை சேர்ந்த 25 வயதுடைய இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
துப்பாக்கிச்சூட்டுடன் தொடர்புடைய மற்றுமொரு துப்பாக்கிதாரி கடந்த 03ஆம் திகதி கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டிருந்தார்.
கரையோர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஜிந்துப்பிட்டி பகுதியில் கடந்த ஜனவரி 16ஆம் திகதி துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
