.webp)
-554420.jpg)
Colombo (News 1st) அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் இராணுவ நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதற்கு அந்நாட்டு செனட் சபை தவறியுள்ளது.
இலங்கை நேரப்படி இன்று(05) அதிகாலை செனட் சபையில் நடைபெற்ற வாக்கெடுப்பில் போர் அதிகார சட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.
100 செனட் உறுப்பினர்களில் 53 பேர் குடியரசுக்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்துவதுடன் சுயாதீன உறுப்பினர்கள் இருவர் உள்ளிட்ட 47 பேர் ஜனநாயகக்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர்.
பலமணி நேர விவாதத்தின் பின்னர் இன்று நடைபெற்ற வாக்கெடுப்பில் போர் தொடர்பான அதிகாரங்களைக் கட்டுப்படுத்துவதற்கு ஆதரவாக 47 வாக்குகள் மாத்திரமே அளிக்கப்பட்டுள்ளன.
எதிராக 53 வாக்குகள் பதிவாகின.
இந்த விவகாரம் தொடர்பான வாக்கெடுப்பு நாளை(06) அமெரிக்க பிரதிநிதிகள் சபையிலும் இடம்பெறவுள்ளது.
The War Powers Act எனும் போர் அதிகார சட்டம் 1973ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது.
வியட்நாம் போரின் போது காங்கிரஸின் ஒப்புதலின்றி அமெரிக்க படையினரை மோதலுக்கு ஈடுபடுத்தும் ஜனாதிபதியின் அதிகாரத்தை கட்டுப்படுத்தற்காக இந்த சட்டம் அமுல்படுத்தப்பட்டது.
இருப்பினும், முன்னாள் ஜனாதிபதிகள் இந்த சட்டத்தைப் புறக்கணித்து, அது அரசியலமைப்பிற்கு விரோதமானது என வாதிட்டதாக சர்வதேச அறிக்கைகள் குறிப்பிடுகின்றன.
