வங்கிப் பணப்பரிமாற்றங்களின் போது மிகவும் அவதானம்

இணையவழி வங்கிப் பணப்பரிமாற்றங்களின் போது மிகவும் அவதானம்

by Staff Writer 28-02-2026 | 1:43 PM

Colombo (News 1st) - இணையவழி வங்கிப் பணப்பரிமாற்றங்களின் போது மிகவும் அவதானமாக செயற்படுமாறு இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு தெரிவித்துள்ளது. 

வங்கிகளின் உத்தியோகபூர்வ இணையதளங்கள் போன்ற போலித்தளங்களை உருவாக்கி மோசடியாளர்கள் சூட்சுமமான முறையில் வாடிக்கையாளர்களின் பணத்தை மோசடி செய்வதாக இலங்கை கணினி அவசர தயார்நிலை குழுவின் பிரதான தகவல் தொழில்நுட்ப பொறியியலாளர் நிரோஷ் ஆனந்த தெரிவித்துள்ளார். 

விசேட விலை கழிவுகளை வழங்குவதாக சமூக வலைத்தளங்களில் விளம்பரப்படுத்தி  அதனூடாக பாதுகாப்பற்ற செயலிகளை தரவிறக்கம் செய்யுமாறு மோசடியாளர்களினால் அறிவுறுத்தப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார். 

குறித்த செயலிகளின் ஊடாக வங்கி கணக்குகளின் தகவல்களை பெற்று வாடிக்கையாளர்களின் பணத்தை மோசடி செய்த சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும் இலங்கை கணினி அவசர தயார்நிலை குழுவின் பிரதான தகவல் தொழில்நுட்ப பொறியியலாளர் நிரோஷ் ஆனந்த குறிப்பிட்டுள்ளார். 

இத்தகைய சந்தர்ப்பங்களின் போது இணையத்தளங்களின் முகவரிகளை உறுதி செய்யுமாறும் அவர் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளார்.