.webp)
-828868-554237.jpg)
COLOMBO(News 1st) 2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கான செயன்முறை பரீட்சை திகதிளை இலங்கை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
பொறியியல் தொழில்நுட்பப் பாடத்திற்கான செயன்முறை பரீட்சைகள் மார்ச் 06 ஆம் திகதி முதல் மார்ச் 15ஆம் திகதி வரை நடைபெறும் என்று பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அழகியல் பாடங்களுக்கான நடைமுறைப் பரீட்சைகள் மார்ச் 09 ஆம் திகதி முதல் மார்ச் 16ஆம் திகதி வரை நடைபெறும்.
பாடசாலை விண்ணப்பதாரர்களின் அனுமதி அட்டைகள், சம்பந்தப்பட்ட பாடசாலைகளின் அதிபர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன.
தனியார் விண்ணப்பதாரர்களின் அனுமதி அட்டைகள் விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தபால்மூலம் அனுப்பப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
செயன்முறை பரீட்சைகள் ஆரம்பமாவதற்கு 07 நாட்களுக்கு முன்னர் திணைக்களத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான online exams.gov.lk இலிருந்து அனுமதி அட்டைகளை பதிவிறக்கம் செய்ய முடியும்.
