சிவநேசதுரை சந்திரகாந்தனுக்கு நெருக்கமானவர் கைது

கொலை, கடத்தல் குற்றச்சாட்டில் சிவநேசதுரை சந்திரகாந்தனுக்கு நெருக்கமானவர் கைது

by Staff Writer 07-07-2025 | 6:59 PM

Colombo (News 1st) கொலை மற்றும் கடத்தல் தொடர்பான குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் சிவநேசதுரை சந்திரகாந்தனுக்கு நெருக்கமான நபரொருவர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கல்முனை பகுதியில் அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதனிடையே, கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் இனிய பாரதி என அழைக்கப்படும் கே.புஷ்பகுமார் நேற்று(06) கைது செய்யப்பட்டார்.

மனிதப் படுகொலை தொடர்பில் சிவநேசதுரை சந்திரகாந்தனிடம் மேற்கொள்ளப்படும் விசாரணைகளுக்கமைய வௌியான தகவல்களின் அடிப்படையில் இவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஏனைய செய்திகள்