Colombo (News 1st) 2024 இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரை அமெரிக்கா அணி வெற்றியுடன் ஆரம்பித்தது.
இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் அமெரிக்கா மற்றும் கனடா அணிகள் களமிறங்கின.
முதலில் துடுப்பெடுத்தாடிய கனடா அணி 20 ஒவர்களில் 05 விக்கெட்களை இழந்து, 194 ஓட்டங்களை பெற்றது.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அமெரிக்க அணி 17.4 ஓவர்களால் வெற்றியிலக்கை கடந்தது.
ஏரன் ஜொன்ஸ் ஆட்டமிழக்காமல் 40 பந்துகளில் 94 ஓட்டங்களை குவித்தார்.