காஸாவில் கடந்த 48 மணித்தியாலங்களில் 50 சிறுவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
காஸாவின் ஜபாலியா பகுதியில் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதல்களில் இவ்வாறு சிறுவர்கள் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன.
இஸ்ரேலின் இந்த தாக்குதலுக்கு UNICEF கண்டனம் வௌியிட்டுள்ளது.
கடந்த வருடம் காஸா மோதல் ஆரம்பமாகியதிலிருந்து இதுவரை 43,314 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் 102,019 பேர் காயமடைந்துள்ளனர்.