Colombo (News 1st)ஸ்பெய்னில் பல தசாப்தங்களின் பின்னர் ஏற்பட்ட திடீர் வௌ்ளத்தினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 200 ஆக அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் காணாமல் போனவர்களை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
வௌ்ளத்தினால் வெலென்ஸியாவில்(Valencia) அதிக பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.
அத்துடன் உயிரிழப்புகள் தொடர்ந்தும் அதிகரிக்கும் சாத்தியமுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வௌ்ளம் ஏற்பட்டு சில மணித்தியாலங்களுக்கு பின்னரே அதிகாரிகளினால் முன்னெச்சரிக்கை அறிவிப்பு விடுக்கப்பட்டதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.