Colombo (News 1st) பாணந்துறை பள்ளிமுல்ல பகுதியில் சட்டவிரோதமாக மாடுகளை ஏற்றிச்சென்ற லொறியொன்றின் மீது பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
சம்பவத்தில் ஒருவர் காயமடைந்ததாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது.
காயமடைந்த நபர் பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.