Colombo (News 1st) தென்னாபிரிக்க ஏ அணியுடனான முதலாவது 4 நாட்களை கொண்ட கிரிக்கெட் போட்டியில் இலங்கை ஏ அணி 6 விக்கெட்களால் வெற்றி பெற்றுள்ளது.
தென்னாபிரிக்காவின் டயமன்ட் ஓவல் மைதானத்தில் இந்த போட்டி நடைபெற்றது.
முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க ஏ அணி, அனைத்து விக்கெட்களையும் இழந்து 372 ஓட்டங்களை பெற்றது.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை ஏ அணி 323 ஓட்டங்களை பெற்றது.
தென்னாபிரிக்க அணி இரண்டாவது இன்னிங்ஸில் 124 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.
இசித விஜேசுந்தர 34 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்களை கைப்பற்றினார்.
இலங்கை அணிக்கு 174 ஓட்டங்கள் வெற்றியிலக்காக நிர்ணயிக்கப்பட்டதுடன் அணித்தலைவர் பசிந்து சூரிய பண்டார 22 ஓட்டங்களையும் ஜனித் லியனகே 23 ஓட்டங்களையும் பெற்றனர்.
ஓஷத பெர்னாண்டோ 80 ஓட்டங்களை பெற்றார்.
43.4 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து இலங்கை ஏ அணி வெற்றியிலக்கை அடைந்தது.