Colombo (News 1st) இறப்பர் செய்கையாளர்களுக்கு உர மானியம் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இறப்பர் செய்கைக்காக பயன்படுத்தப்படும் 50 கிலோகிராம் உரப் பொதியின் விலையை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அரச உர நிறுவனத்தின் தலைவர், கலாநிதி ஜகத் பெரேராவிற்கு பணிப்புரை விடுத்துள்ளதாக விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
அதற்கிணங்க, 50 கிலோகிராம் உரப் பொதியின் விலையை 9,500 ரூபாவிலிருந்து 5,500 ரூபா வரை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.