Colombo (News 1st) இஞ்சி இறக்குமதிக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இலங்கை அரச வர்த்தகக் கூட்டுத்தாபனத்தின் மூலம் அடுத்துவரும் 3 மாத காலப்பகுதிக்குள் 3000 மெட்ரிக் தொன் பச்சை இஞ்சியை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
விவசாய, பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் மற்றும் வர்த்தக, வாணிப மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை இவ்வாறு அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இஞ்சி உற்பத்திக்கான வசதிகளை வழங்கி உள்நாட்டு சந்தையில் இஞ்சியின் சில்லறை விலையைக் குறைப்பதற்கான விலைமட்டத்தை ஆராய்ந்து இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.