![sample image](https://cdn.newsfirst.lk/assets/NEWS-LOGO-Recovered%20(1).webp)
Colombo (News 1st) இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு, பிரபல பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவாலுடன் பேட்மிண்டன் விளையாடிய காணொளி தற்போது அதிகம் பகிரப்பட்டு வருகின்றது.
ராஷ்டிரபதி பவனில் உள்ள பேட்மிண்டன்(Badminton) மைதானத்தில் இவர்களிருவரும் பேட்மிண்டன் விளையாடியுள்ளனர். இதன்மூலம் விளையாட்டின் மீதுள்ள ஆர்வத்தை வௌிப்படுத்தியுள்ளார் ஜனாதிபதி முர்மு.
இது தொடர்பான காணொளியை ஜனாதிபதி அலுவலகம் தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.