யாழ்.விமான நிலைய அபிவிருத்தி இந்தியாவுடன்...

யாழ்.சர்வதேச விமான நிலையத்தை இந்தியாவுடன் இணைந்து அபிவிருத்தி செய்ய தீர்மானம்

by Staff Writer 05-05-2024 | 2:53 PM

Colombo (News 1st) யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை இந்தியாவுடன் இணைந்து அபிவிருத்தி செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக துறைமுகங்கள், கப்பல்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை அபிவிருத்தி செய்வதற்காக முதலீட்டாளர்களிடமிருந்து முன்மொழிவுகள் கோரப்பட்டிருந்ததாக அமைச்சின் செயலாளர் K.D.S.ருவன்சந்திர குறிப்பிட்டுள்ளார். 

இதன்போது ஒரேயொரு முன்மொழிவு மாத்திரமே கிடைக்கப்பெற்றதாக அவர் கூறினார்.

இதன் காரணமாக யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை இந்தியாவுடன் இணைந்து அபிவிருத்தி செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

அதற்கமைய விரைவில் இதற்கான யோசனை தயாரிக்கப்படவுள்ளது. =

இதனிடையே, எதிர்வரும் ஜூலை மாதம் முதல் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திலிருந்து எயார் இன்டிகோ விமான சேவை நிறுவனமும் விமானப் பயணங்களை முன்னெடுக்கவுள்ளது.

தற்போது எயார் எலையன்ஸ் விமான சேவை நிறுவனம் மாத்திரம் விமான சேவைகளை முன்னெடுத்து வருகின்றது.

எயார் எலையன்ஸ் விமான சேவை நிறுவனத்தினால் கொழும்பு - சென்னை இடையே நாளாந்தம் ஒரு விமான சேவை முன்னெடுக்கப்படுகின்றது.