Colombo (News 1st) தென்னாபிரிக்க நாடான மாலியில் பஸ்ஸொன்று ஆற்றில் கவிழ்ந்ததில் குறைந்தது 31 பேர் உயிரிழந்துள்ளனர்.
மாலியின் Kenieba நகரிலிருந்து Burkina Faso நோக்கி பயணித்த பஸ்ஸே இவ்வாறு விபத்திற்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் மேலும் 10 பேர் காயமடைந்துள்ளனர்.
பஸ் ஆற்றை கடக்க முற்பட்ட போது பாலத்திலிருந்து விலகி ஆற்றில் கவிழ்ந்துள்ளது.
சாரதியினால் வாகனத்தை கட்டுப்படுத்த முடியாமல் போனமையால் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.