Colombo (News 1st) கம்பஹா - மல்வத்துஹிரிபிட்டிய, பட்டபொல பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் காயமடைந்துள்ளார்.
மல்வத்துஹிரிபிட்டிய பகுதியில் உள்ள வங்கியொன்றின் கதவுகள் நேற்று (09) இரவு திறக்கப்பட்டிருந்ததாக கிடைத்த தகவலுக்கு அமைய பொலிஸார் குறித்த இடத்திற்கு சென்றுள்ளனர்.
இதன்போது, அங்கு நிறுத்தப்பட்டிருந்த முச்சக்கரவண்டியை சேதனைக்கு உட்படுத்த பொலிஸார் முற்பட்டுள்ளனர்.
இதன்போது, முச்சக்கரவண்டியில் இருந்த நபர் பொலிஸாரிடமிருந்த துப்பாக்கியை பறித்து, துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளார்.
அத்துடன், பொலிஸாரின் துப்பாக்கியுடன் சந்தேகநபர் தப்பிச்சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தில் 51 வயதான பொலிஸ் சார்ஜன்ட் காயமடைந்த நிலையில், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தப்பிச்சென்ற நபரை கைது செய்ய விசாரணைகள் முனனெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.