Colombo (News 1st) பெரும்போக நெல் கொள்வனவிற்கான குறைந்தபட்ச விலைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
நிதி அமைச்சின் முழுமையான மேற்பார்வையின் கீழ் நெல்லை கொள்வனவு செய்ய நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
14% ஈரப்பதனுடைய நாட்டரிசி நெல் ஒரு கிலோகிராமிற்கான குறைந்தபட்ச விலை 105 ரூபாவாகும்.
ஒரு கிலோ சம்பா நெல் 120 ரூபாவிற்கும் ஒரு கிலோ கீரி சம்பா நெல் 130 ரூபாவிற்கும் கொள்வனவு செய்யப்பட வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், 14 வீதத்திற்கும் அதிகமான ஈரப்பதம் கொண்ட நாட்டரிசி நெல் ஒரு கிலோகிராமிற்கு குறைந்தபட்ச விலையாக 90 ரூபா நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
14 வீதத்திற்கும் அதிகமான ஈரப்பதம் கொண்ட சம்பா நெல் ஒரு கிலோகிராம் 100 ரூபாவிற்கும் கீரி சம்பா நெல் ஒரு கிலோகிராம் 120 ரூபாவிற்கும் கொள்வனவு செய்யப்பட வேண்டுமென விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
சிறிய மற்றும் நடுத்தர அரிசி ஆலை உரிமையாளர்களுக்கு, நெல் கொள்வனவு செய்வதற்காக சலுகை வட்டியின் கீழ் கடன் வழங்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு குறிப்பிட்டுள்ளது.