Colombo (News 1st) ஆப்கானிஸ்தானுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் தொடருக்கான இலங்கை குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.
16 பேர் கொண்ட இலங்கை குழாமில் இருந்து முன்னாள் அணித்தலைவர் தசுன் ஷானக்க நீக்கப்பட்டுள்ளார்.
கடந்த மாதம் இடம்பெற்ற சிம்பாப்வேக்கு எதிரான தொடருக்காக பெயரிடப்பட்ட குழாத்தில் இருந்து நீக்கப்பட்ட மூவரில் ஷானக்கவும் ஒருவர்.
நுவன் பெர்னாண்டோ, ஜெஃப்ரி வென்டர்சே ஆகியோரும் குழாத்தில் இணைக்கப்படவில்லை.
குசல் மெண்டிஸ் தலைமையிலான இலங்கை அணியின் துணைத்தலைவராக சரித் அசலங்க பெயரிடப்பட்டுள்ளார்.
பத்தும் நிஸங்க, அவிஷ்க பெர்னாண்டோ, சதீர சமரவிக்ரம, ஜனித் லியனகே ஆகியோர் இணைக்கப்பட்டுள்ளனர்.
வனிது ஹசரங்க, மஹிஷ் தீக்ஷன, துஷ்மந்த சமிர, டில்ஷான் மதுஷங்க, பிரமோத் மதுஷான், சஹான் ஆராச்சிகே உள்ளிட்ட பந்துவீச்சாளர்களும், சகலதுறை வீரர்களும் இந்த அணியில் இடம்பெற்றுள்ளனர்.
ஷெவோன் டானியல், அகில தனஞ்சய, துனிட் வெல்லலகே, சாமிக்க கருணாரத்ன ஆகியோரும் இந்த அணியில் இடம்பிடித்துள்ளனர்.
இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஒரு நாள் கிரிக்கெட் தொடர் நாளை ஆரம்பமாகவுள்ளது.
கண்டி பல்லேகலை மைதானத்தில் இந்த போட்டிகள் நடைபெறவுள்ளன.
இரண்டு அணிகளுக்கும் இடையிலான ஒற்றை டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி வெற்றியீட்டியமை குறிப்பிடத்தக்கது.