Colombo (News 1st) காஸா போர் நிறுத்தத்திற்கான புதிய முன்மொழிவுகளுக்கு பதில் அனுப்பியுள்ளதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது.
இஸ்ரேல், அமெரிக்கா, கட்டார் மற்றும் எகிப்து ஆகிய நாடுகளால் உருவாக்கப்பட்ட இந்த உடன்படிக்கையின் விபரங்கள் வௌியிடப்படவில்லை.
6 வார போர் நிறுத்தம் இந்த உடன்படிக்கையில் உள்ளடக்கப்படுமென முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது.
இதன்போது பலஸ்தீன சிறைக்கைதிகளுக்கு மாற்றாக மேலும் பல இஸ்ரேலிய பணயக்கைதிகள் பரிமாறப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், புதிய முன்மொழிவுகளுக்கு ஹமாஸ் அனுப்பிய பதிலை ஆராய்ந்து வருவதாக இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் தெரிவித்துள்ளன.