Colombo (News 1st) ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒற்றை டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 10 விக்கெட்களால் வெற்றியீட்டியது.
கொழும்பு SSC மைதானத்தில் இந்த போட்டி இடம்பெற்றது.
போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் முதல் இன்னிங்ஸில் 198 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்களையும் இழந்தது.
இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 439 ஓட்டங்களைக் குவித்தது.
241 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் 296 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்களையும் இழந்தது.
போட்டியில் இலங்கை அணியின் வெற்றியிலக்கு 56 ஓட்டங்களாக நிர்ணயிக்கப்பட்டது.
அந்த இலக்கை இலங்கை அணி விக்கெட் இழப்பின்றி கடந்தது.
8 விக்கெட்களை வீழ்த்தி இலங்கை அணியின் வெற்றிக்கு வித்திட்ட பிரபாத் ஜயசூரிய போட்டியின் சிறப்பாட்டக்காரராக தெரிவானார்.