![sample image](https://cdn.newsfirst.lk/assets/NEWS-LOGO-Recovered%20(1).webp)
Colombo (News 1st) இசைஞானி இளையராஜாவின் மகளும் பின்னணிப் பாடகியுமான பவதாரிணி இலங்கையில் காலமானார்.
47 வயதான அவர் உடல்நலக்குறைவால் காலமானார்.
பவதாரிணி உடல்நலக்குறைவால் இலங்கையில் ஆயுர்வேத சிகிச்சை பெற்று வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
இளையராஜா இசையமைத்த ராசய்யா திரைப்படத்தின் மூலம் பவதாரிணி பாடகியாக அறிமுகமானார்.
தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னட படங்களில் அவர் இசையமைப்பாளராகவும் செயற்பட்டுள்ளார்.