ஆழ்கடலை ஆராயவுள்ள Matsya 6000 நீர்மூழ்கிக் கப்பல்

ஆழ்கடலை ஆராயவுள்ள இந்தியாவின் Matsya 6000 நீர்மூழ்கிக் கப்பல்

by Bella Dalima 22-09-2023 | 4:26 PM

INDIA: விண்வௌியில் ஆய்வுகளை மேற்கொண்டு வரும் இந்தியா ஆழ்கடலையும் ஆய்வு செய்யும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது. 

அதற்கு உதவியாக, இந்தியாவின் புவி அறிவியல் அமைச்சகத்தின் கீழ் உள்ள சென்னை தேசிய கடல் தொழில்நுட்ப நிறுவனம் 'மத்ஸ்யா 6000' ( Matsya 6000) என்ற நீர்மூழ்கிக் கப்பலை உருவாக்கியுள்ளது

இந்த நீர்மூழ்கிக் கப்பல், கடல் மட்டத்தின் கீழ் 6000 மீட்டர் ஆழத்திற்கு 3 ஆய்வாளர்களை ஏற்றி செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 

இந்த நீர்மூழ்கிக் கப்பல் 2.1 மீட்டர் விட்டமும் 600 பார் அழுத்தத்தை தாங்கக்கூடிய 22 மில்லிமீட்டர் தடிமன் கொண்ட Titanium alloy  மூலம் பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்டுள்ளது. 

இது இந்தியாவின் முதல் மனித கடல் ஆய்வுப் பணியாக இருக்கும். 

இந்த நீர்மூழ்கிக் கப்பல் மூலமான ஆய்வுகள் கடல் வாழ்விடத்தையும், கடல்வாழ் உயிரினங்களையும் பாதிக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.