by Staff Writer 24-02-2022 | 7:08 PM
Colombo (News 1st) மின்வெட்டு அமுல்படுத்தப்பட்டிருந்த சந்தர்ப்பத்தில் குப்பி விளக்கு கவிழ்ந்தமையால், வீடொன்று தீப்பற்றிய சம்பவம் கிண்ணியாவில் பதிவாகியுள்ளது.
கிண்ணியா - மாஞ்சோலை முதலாவது ஒழுங்கையில் அமைந்துள்ள வீடொன்று நேற்றிரவு தீப்பற்றியுள்ளது.
நேற்றிரவு மின்வெட்டு அமுல்படுத்தப்பட்டிருந்த சந்தர்ப்பத்தில் குறித்த வீட்டிலிருந்த பிள்ளைகள் குப்பி விளக்கை ஏற்றி படித்துள்ளனர்.
இதன்போது, குப்பி விளக்கு கவிழ்ந்தமையே தீ பரவியமைக்கான காரணம் என பொலிஸார் தெரிவித்தனர்.
பிரதேசவாசிகள் தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளனர். தீயினால் வீடு முழுவதும் எரிந்துள்ளதுடன், பொருட்களும் சேதமாகியுள்ளன.
இந்த சம்பவம் நேற்றிரவு 8.40 அளவில் இடம்பெற்றுள்ளது.