by Bella Dalima 06-07-2021 | 7:09 PM
Colombo (News 1st) பாகிஸ்தானுடனான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான புதிய இங்கிலாந்து குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.
18 பேரடங்கிய புதிய குழாமில் சர்வதேச போட்டிகளில் இதுவரை விளையாடாத 9 வீரர்கள் உள்ளடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.
இங்கிலாந்து அணியின் 3 வீரர்களுக்கும் 4 நிர்வாக ஊழியர்களுக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதால், புதிய குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஒரு நாள் தொடர் எதிர்வரும் வியாழக்கிழமை (08) கார்டிப்பில் ஆரம்பமாகவுள்ளது.
இந்நிலையில், 7 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதால், ஏனைய வீரர்களை சுயதனிமையில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பென் ஸ்டோக்ஸின் தலைமையிலான புதிய குழாத்தில் Brydon Carse, Zak Crawley, Lewis Gregory, Will Jacks, Tom Helm, Dan Lawrence, David Payne, Phil Salt , John Simpson ஆகியோர் புதிதாக களமிறங்கவுள்ளதாக இங்கிலாந்து கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.
IPL தொடரின் போது பென் ஸ்டோக்ஸின் கைவிரலில் காயமேற்பட்டதால், அவர் கடந்த போட்டிகளில் பங்கேற்கவில்லை.
இங்கிலாந்து அணி பாகிஸ்தானுடன் ஒரு நாள் மற்றும் T20 தொடரிலும் விளையாடவுள்ளது.