by Staff Writer 08-04-2021 | 5:45 PM
Colombo (News 1st) தங்கொட்டுவை பகுதியில் கைப்பற்றப்பட்ட இரண்டு பவுசர்களிலும் இருந்த தேங்காய் எண்ணெயில் Aflatoxin எனும் புற்றுநோயை உண்டாக்கும் நச்சு இரசாயனம் அடங்கியுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
இலங்கை கட்டளைகள் நிறுவனத்தினால் இந்த விடயம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பில் அரச இரசாயன பகுப்பாய்வாளரதும் சுகாதார அமைச்சின் உணவு கட்டுப்பாட்டு பிரிவினதும் அறிக்கையை எதிர்பார்த்துள்ளதாக சுங்க ஊடகப் பேச்சாளர் , பிரதி சுங்கப் பணிப்பாளர் சுதந்த சில்வா தெரிவித்தார்.