பிரதமர் ஹரிணி அமரசூரிய மணிலா நகருக்கு பயணம்

பிரதமர் ஹரிணி அமரசூரிய மணிலா நகருக்கு பயணம்

by Staff Writer 09-03-2026 | 6:45 PM

Colombo (News 1st) பிரதமர், கலாநிதி ஹரிணி அமரசூரிய பிலிப்பைன்ஸின் மணிலா நகருக்கு உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்டுள்ளார்.

​

ஆசிய அபிவிருத்தி வங்கியின்(ADB) விசேட அழைப்பின் பேரில் சர்வதேச மகளிர் தின நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக பிரதமர் அங்கு சென்றுள்ளதாக பிரதமர் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

​

மணிலாவிலுள்ள நினோய் அக்வினோ சர்வதேச விமான நிலையத்தை (NAIA) சென்றடைந்த பிரதமரை பிலிப்பைன்ஸிற்கான இலங்கை தூதுவர் கலாநிதி சானக்க தல்பஹேவா, பிலிப்பைன்ஸ் அரசாங்கத்தின் உயர்மட்ட அதிகாரிகள் மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் பிரதிநிதிகள் ஆகியோர் இணைந்து வரவேற்றனர்.

​

இந்த விஜயத்தின் முக்கிய அங்கமாக மணிலாவிலுள்ள ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைமையகத்தில் நடைபெறவுள்ள சர்வதேச மகளிர் தின விழாவில் பிரதமர் விசேட உரை நிகழ்த்தவுள்ளார்.

​

அத்துடன், இந்த விஜயத்தின் இடையே பிலிப்பைன்ஸ் அரசாங்கத்தின் பல அமைச்சர்களுடன் பிரதமர் இருதரப்பு பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபடவுள்ளார்.

இதன்போது இலங்கை மற்றும் பிலிப்பைன்ஸ் நாடுகளுக்கிடையிலான பரஸ்பர நலன்சார் விடயங்கள் குறித்தும் இருநாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பு மற்றும் இருதரப்பு உறவுகளை மேலும் பலப்படுத்துவது குறித்தும் கலந்துரையாடப்படவுள்ளது.