.webp)

Colombo (News 1st) கிரிந்த கடற்கரை பகுதியில் கைப்பற்றப்பட்ட ஐஸ் போதைப்பொருள் தொகை தற்போது துபாயில் வசிக்கும் போதைப்பொருள் கடத்தல்காரரான 'ரன்மல்லி' என்பவருக்கு சொந்தமானதென தகவல் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
345 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் 07 சந்தேகநபர்கள் இன்று(12) அதிகாலை முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த போதைப்பொருட்களை கடல் மார்க்கமாக படகின் மூலம் நாட்டிற்கு கொண்டுவந்ததாக கூறப்படும் பிரதான சந்தேகநபரும் கைது செய்யப்பட்டவர்களில் உள்ளடங்குகின்றார்.
சம்பவத்துடன் தொடர்புடைய 06 வாகனங்களும் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
போதைப்பொருட்களை கொண்டுவந்ததாக கூறப்படும் படகு இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.
மேல் மாகாண வடக்கு குற்ற விசாரணை பிரிவின் அதிகாரிகள் குழுவினால் இந்த சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யூ.வூட்லர் தெரிவித்துள்ளார்.
குறித்த சுற்றிவளைப்பிற்கு தங்காலை பொலிஸ் பிரிவின் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரின் ஒத்துழைப்பும் கிடைத்துள்ளது.
