கணேமுல்ல சஞ்சீவ கொலை ஐவரின் திட்டம் - பொலிஸ்

கணேமுல்ல சஞ்சீவ கொலை ஐவரின் திட்டம் - பொலிஸார் வௌிக்கொணர்வு

by Staff Writer 02-11-2025 | 6:59 PM

Colombo (News 1st) கணேமுல்ல சஞ்சீவ கொலை ஐவரின் திட்டத்திற்கமைய இடம்பெற்றுள்ளமை விசாரணைகளில் வௌிக்கொணரப்பட்டுள்ளது.

தடுத்துவைக்கப்பட்டுள்ள இஷாரா செவ்வந்தி உள்ளிட்ட சந்தேகநபர்களிடம் நடத்தப்பட்ட நீண்ட விசாரணைகளின் போது இந்த விடயம் வௌிக்கொணரப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கெஹெல்பத்தர பத்மே, கொமான்டோ சலிந்த, தருண், இஷாரா செவ்வந்தி மற்றும் துப்பாக்கிதாரியாக செயற்பட்ட சமிந்து டில்ஷான் ஆகியோர் இந்த கொலையை திட்டமிட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

கடந்த பெப்ரவரி 19ஆம் திகதி கொழும்பு புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் 05ஆம் இலக்க நீதவான் அறைக்குள் நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் கணேமுல்ல சஞ்சீவ கொலை செய்யப்பட்டார்.