கைத்துப்பாக்கி திருட்டு : உள்ளக விசாரணை

கல்கிசை நீதிமன்றிலிருந்து கைத்துப்பாக்கியை திருடிய கைதி தொடர்பில் உள்ளக விசாரணை

by Staff Writer 30-10-2025 | 6:35 AM

Colombo (News 1st) கல்கிசை நீதிமன்றத்தின் வழக்கு சான்றுப் பொருட்கள் களஞ்சியப்படுத்தப்பட்ட அறையிலிருந்து கைத்துப்பாக்கியை திருடிய கைதி தொடர்பில் சிறைச்சாலைகள் திணைக்களத்தினால் உள்ளக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பில் ஆராய்வதற்காக விசேட குழு நியமிக்கப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்தது.

வெலிக்கடை சிறைச்சாலை கைதியொருவர் கல்கிசை நீதிமன்ற வழக்கு சான்றுப் பொருட்கள் களஞ்சியப்படுத்தப்பட்ட அறையிலிருந்த கைத்துப்பாக்கியை நேற்று(29) திருடியிருந்தார்.

துப்புரவு பணிகளுக்காக கல்கிசை நீதிமன்றத்திற்கு அழைத்துச்செல்லப்பட்டிருந்த கைதியே இவ்வாறு திருட்டில் ஈடுபட்டிருந்தார்.

குறித்த கைத்துப்பாக்கி சூட்சுமமான முறையில் உடலில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது.

செக்கோஸ்லோவாக்கியாவில் தயாரிக்கப்பட்ட 09 மில்லிமீட்டர் ரக கைத்துப்பாக்கியே இவ்வாறு திருடப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஏனைய செய்திகள்