கனடாவுடனான வர்த்தக பேச்சுவார்த்தைகள் இடைநிறுத்தம்

கனடாவுடனான வர்த்தக பேச்சுவார்த்தைகளை இடைநிறுத்துவதாக அமெரிக்க ஜனாதிபதி தெரிவிப்பு.

by Staff Writer 28-06-2025 | 7:29 PM

கனடாவுடனான வர்த்தக பேச்சுவார்த்தைகளை இடைநிறுத்துவதாக அமெரிக்க ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் முக்கிய தொழில்நுட்ப நிறுவனங்களை பாதிக்கும் வகையில் கனடா அமுல்படுத்திய வரிகளுக்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் ட்ரம்ப் இந்த  அறிவிப்பை விடுத்துள்ளார்.

கனடா வெகுவிரைவில் புதிய வரிகளை செலுத்த நேரிடுமெனவும் ட்ரம்ப எச்சரித்துள்ளார்.

கனடாவுடன் வர்த்தகம் மேற்கொள்வது கடினம் எனவும் டொனால்ட் டரம்ப் ஊடகங்களுக்கு கூறியுள்ளார்.