''பொலிஸ் ஊடகப் பொறுப்பை இராஜினாமா செய்யவில்லை''

''பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொறுப்பை நான் இராஜினாமா செய்யவில்லை''

by Staff Writer 21-03-2025 | 7:32 PM

Colombo(News1st) பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொறுப்பை தாம் இதுவரை இராஜினாமா செய்யவில்லை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்தார்.

தனிப்பட்ட காரணங்களுக்காக தாம் இடமாற்றம் கோரியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

ஊடகப்பேச்சாளராக ஒருவர் நியமிக்கப்படும் வரை தம்மால் அந்த பொறுப்பிலிருந்து விலகியிருக்க முடியாது என அவர் கூறினார்

தமக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்பை தாம் கட்டாயமாக நிறைவேற்றுவதாகவும் அவர் தெரிவித்தார்.
 

ஏனைய செய்திகள்