சுதந்திரக் கட்சியின் செயலாளர் நியமனம் சிக்கலில்

ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர் நியமனம் சிக்கலில்

by Staff Writer 06-08-2024 | 11:00 AM

ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர் நியமனம் தொடர்பாக காணப்படும் சட்ட நிலைமை குறித்து சட்ட மாஅதிபரிடம் ஆலோசனை கோரியுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இந்தப் பதவிக்கு சுதந்திரக் கட்சியின் 03 தரப்புகளிலிருந்தும் செயலாளர்கள் முன்வந்துள்ளதாக ஆணைக்குழுவின் தவிசாளர் ஆர்.எம்.ஏ.எல் ரத்நாயக்க தெரிவித்தார்.

இதனைத் தவிர கட்சியின் பதவி தொடர்பில் நீதிமன்றத்தில் சில வழக்குகள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுவருகின்றன.

இந்த சூழலில் கட்சியின் செயலாளரை நியமிப்பது தமது ஆணைக்குழுவுக்கு சிக்கல் நிலையை ஏற்படுத்தியுள்ளதென தவிசாளர் குறிப்பிட்டுள்ளார்.