.webp)
அமெரிக்காவின் கென்டக்கி (Kentucky) மற்றும் இண்டியானா மாகாணங்களுக்கு இடையேயுள்ள கிளார்க் மெமோரியல் பாலத்தில் (Clark Memorial Bridge) கட்டுப்பாட்டை இழந்த ட்ரக் ஒன்று பக்கவாட்டு தடுப்புச்சுவர்களை உடைத்துக்கொண்டு அந்தரத்தில் தொங்கிய காட்சி தற்போது வௌியாகி, சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.
Clark Memorial பாலமானது செகன்ட் ஸ்ட்ரீட் பாலம் (2nd Street Bridge) என்றும் அழைக்கப்படுகிறது. ஓஹியோ நதிக்கு குறுக்கே இந்த பாலம் கட்டப்பட்டள்ளது.
இந்த பாலத்தில் கடந்த மார்ச் 18 ஆம் திகதி ட்ரக் ஒன்று எதிரில் வந்த காருடன் மோதி கட்டுப்பாட்டை இழந்து பாலத்தின் பக்கவாட்டு தடுப்புச்சுவர்களை உடைத்துக்கொண்டு ஆற்றை நோக்கி பாய்ந்து அந்தரத்தில் தொங்கியது.
மீட்புக்குழுவினர் விரைந்து செயற்பட்டதால், அதிர்ஷ்டவசமாக ட்ரக்கை செலுத்திய 26 வயதான Sydney Thomas என்ற பெண் ஓட்டுநர் உயிர் தப்பினார்.
விபத்து இடம்பெற்ற சமயத்தில் அது தொடர்பான காட்சிகள் வௌியாகியிருந்தாலும், ட்ரக்கில் பொருத்தப்பட்டிருந்த Dashcam கெமராவில் பதிவாகியிருந்த விபத்திற்கு சில நொடிகளுக்கு முன்னர் ஓட்டுநர் டிரக்கை இயக்கிய காட்சிகள் தற்போது வௌியாகியுள்ளன.
விபத்தை அருகில் இருந்து பார்ப்பது போல் பதறவைக்கும் காட்சிகள் X தளத்தில் வௌியிடப்பட்டு, அவை 13 மில்லியன் பார்வைகளைக் கடந்து வைலராகி வருகிறது.
JUST IN: Dashcam footage released of the semi-truck that launched over the edge of the 2nd Street Bridge in Kentucky.
— Collin Rugg (@CollinRugg) May 16, 2024
33-year-old Trevor W. Branham has been charged for the crash.
Branham's Chevrolet truck can be seen speeding and swerving before weaving out of the way to avoid… pic.twitter.com/pfNJYJKOMg
BREAKING: Heroic rescue made as semi-truck hangs off a bridge over the Ohio River.
— RG | Sarge (@RG_Sarge) March 1, 2024
Insane.
The truck was hanging over the Ohio River on the Clark Memorial Bridge, also known as the 2nd Street Bridge after getting into a collision.
The crash initially happened around noon… pic.twitter.com/ctUCiIqO88