ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்த இந்தியா

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஹைப்பர்சொனிக் ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்த இந்தியா

by Staff Writer 17-11-2024 | 1:22 PM

Colombo (News 1st) இந்தியா கண்டம் விட்டு கண்டம் பாயும் ஹைப்பர்சொனிக் (hypersonic) ஏவுகணையொன்றை வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது.

இந்திய வரலாற்றில் முதன்முறையாக குறித்த வகை ஏவுகணையை சோதனை செய்துள்ளதாக அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் (Rajnath Singh) குறிப்பிட்டுள்ளார்.

அப்துல் கலாம் தீவு என அழைக்கப்படும் வீலர் தீவில் குறித்த ஏவுகணை சோதனை செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம் இந்தியா வரலாற்று மைல் கல்லை அடைந்துள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் (Rajnath Singh) தனது எக்ஸ்(X) பதிவில் தெரிவித்துள்ளார்.

ஏனைய செய்திகள்