சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த பெண்

சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த பெண்

by Staff Writer 02-10-2024 | 7:24 PM

Colombo (News1st) மட்டக்களப்பு - களுவாஞ்சிக்குடி ஒந்தாச்சிமடம் பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் பெண்ணொருவர் உயிரிழந்திருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஒந்தாச்சிமடம் பகுதியை சேர்ந்த 53 வயதுடைய குறித்த பெண் அவரது வீட்டு முற்றத்தில் நேற்றிரவு(01) உயிரிழந்து கிடப்பதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. 

உயிரிழந்த பெண்ணின் இடது கையிலும் வலது முழங்காலிலும் காயங்கள் காணப்படுவதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

இந்த பெண் 04 வருடங்களாக கோழிப்பண்ணையொன்றில் பணி புரிந்துவந்தவர்கள் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பாக களுவாஞ்சிக்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது.