Colombo (News1st) இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதல்களால் அங்கு வசிக்கும் இலங்கை மக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என அந்நாட்டுக்கான இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.
அங்கு வசிக்கும் இலங்கை மக்கள் குறித்து தொடர்ந்தும் கண்காணித்து வருவதாக இலங்கைக்கான தூதுவர் நிமல் பண்டார கூறினார்.
இஸ்ரேலில் வசிக்கும் இலங்கை மக்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இஸ்ரேலில் இலங்கையை சேர்ந்த 11,000 க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.
இஸ்ரேலின் அனைத்து செயற்பாடுகளும் வழமை போன்று நடைபெற்றுவருவதாக இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் நியூஸ் ஃபெஸ்ட்டுக்கு தெரிவித்தார்.