Colombo (News1st) முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ். ஸ்ரீதரன் புதிய ஜனாதிபதிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
யாழ்.மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ். ஸ்ரீதரன் இன்று(01) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவை சந்தித்துள்ளார்.
இலங்கையின் ஒன்பதாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக மக்கள் இறைமையின் ஊடாகத் தெரிவு செய்யப்பட்ட அனுர குமார திசாநாயக்கவை வாழ்த்திய எஸ். ஸ்ரீதரன் ஜனாதிபதியுடன் சிநேகபூர்வ உரையாடலில் ஈடுபட்டதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்தது.