நடாஷா எதிரிசூரிய பிணையில் விடுவிப்பு

நடாஷா எதிரிசூரிய பிணையில் விடுவிப்பு

by Staff Writer 05-07-2023 | 3:55 PM

Colombo (News 1st) விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நடாஷா எதிரிசூரிய பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

ஒரு இலட்சம் ரூபா தனிநபர் பிணையில் நடாஷாவை விடுவிக்க கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய பட்டபெந்திகே உத்தரவிட்டார்.

 ICCPR எனப்படுகின்ற சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச இணக்கப்பாட்டு சட்டத்தின் கீழ் அவர் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார். 

சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச இணக்கப்பாட்டு சட்டத்தை அறிமுகப்படுத்திய அப்போதைய அமைச்சர் ரோஹித போகொல்லாகம வௌியிட்ட கருத்துகளை மேற்கோள்காட்டி கருத்து வௌியிட்ட நீதிபதி ஆதித்திய பட்டபெந்தி, குறித்த சட்டத்தை பாராளுமன்றம் இலங்கைக்கு அறிமுகப்படுத்திய நோக்கத்திற்கு புறம்பாக இன்று செயற்படுத்தப்படுவதாகக் கூறினார்.

இந்த சட்டத்திற்கு அமைய, நடாஷா எதிரிசூரிய வௌியிட்ட கருத்தை மத அல்லது மத குரோதத்தைத் தூண்டும் வகையில் தெரிவிக்கப்பட்ட கருத்தாகக் கொள்ள முடியாது என நீதிபதி தெரிவித்துள்ளார்.

நடாஷா எதிரிசூரியவிற்கு  எதிராக மேலும் இரண்டு வழக்குகள் நீதவான் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதுடன், மேல் நீதிமன்றத்தின் தீர்ப்பை நகர்த்தல் பத்திரம் ஊடாக அந்த நீதிமன்றத்திற்கு அறிவிப்பதாக அவரது சட்டத்தரணிகள் கூறினர்.