1KG கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது

ஒரு கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது

by Staff Writer 02-06-2023 | 1:10 PM

திருகோணமலை - முள்ளிப்பொத்தானையில் கேரள கஞ்சா தொகையுடன் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். 

கடற்படையினரும் பொலிஸாரும் இணைந்து திருகோணமலை - முள்ளிப்பொத்தானையில் நேற்று (01) சோதனையில் ஈடுபட்டனர்.  

இதன்போது, ஒரு கிலோகிராமிற்கும் அதிகமான கேரள கஞ்சா தொகையுடன் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். 

சந்தேகநபரை சோதித்த போது, கேரள கஞ்சா தொகை கைப்பற்றப்பட்டதாக கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்தது. 

ஒரு கிலோகிராமும் 90 கிராமும் எடையுடைய கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டதுடன், அதன் பெறுமதி 6,27,000 ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது. 

சந்தேகநபர் தம்பலகாமம் பகுதியை சேர்ந்த 53 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.