நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு

by Staff Writer 23-03-2023 | 7:40 AM

Colombo (News 1st) இன்று(23) ஒரு நாள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தொழிற்சங்கங்களின் ஒன்றிணைந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

இன்றைய தினம்(23) அலுவலக சேவை, நுகர்வோர் சேவை உள்ளிட்ட எந்தவொரு சேவையும் முன்னெடுக்கப்படாதென நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தொழிற்சங்க இணை ஏற்பாட்டாளர் உபாலி ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இன்று(23) காசாளர் பிரிவு மூடப்படும் அதேநேரம் கட்டணப் பட்டியல் விநியோகமும் முன்னெடுக்கப்படாதென அவர் குறிப்பிட்டுள்ளார்.

திருத்தப் பணிகள் முன்னெடுக்கப்படாமையினால் சில பகுதிகளில் நீர் விநியோகத்திற்கு இடையூறு ஏற்படலாமென அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, பல்கலைக்கழக விரிவுரையாளர்களால் ஆரம்பிக்கப்பட்ட பணிப்பகிஷ்கரிப்பு இன்று 15 ஆவது நாளாகவும் தொடர்கின்றது.

தமது கோரிக்கைகளுக்கான தீர்வு கிடைக்கும் வரை பணிப்பகிஷ்கரிப்பு தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் என பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் தொழிற்சங்க சம்மேளனம் தெரிவித்துள்ளது.