பர்வேஸ் முஷாரஃப் காலமானார்

பாகிஸ்தானின் முன்னாள் ஜனாதிபதி பர்வேஸ் முஷாரஃப் காலமானார்

by Staff Writer 05-02-2023 | 3:53 PM

Colombo (News 1st) பாகிஸ்தானின் முன்னாள் ஜனாதிபதி பர்வேஸ் முஷாரஃப்(Pervez Musharraf) தமது 79ஆவது வயதில் காலமானார்.

அவர் உடல்நலக் குறைவினால் துபாயிலுள்ள வைத்தியசாலையொன்றில் நீண்ட நாள் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று(05) மதியம் காலமானதாக பாகிஸ்தான் இராணுவம் தெரிவித்துள்ளது.

அவர் 2016ஆம் ஆண்டிலிருந்து துபாயில் தங்கி சிகிச்சை பெற்று வந்ததாக பாகிஸ்தான் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

1999ஆம் ஆண்டு இடம்பெற்ற கார்கில் போரின் முக்கிய எண்ணக்கர்த்தாவாக திகழ்ந்த இவர், 2001ஆம் ஆண்டிலிருந்து 2008ஆம் ஆண்டு வரை பாகிஸ்தானின் ஜனாதிபதியாக பதவி வகித்தார்.