நியூஸிலாந்து அணியுடனான போட்டியில் இந்தியா வெற்றி

நியூஸிலாந்து அணிக்கெதிரான போட்டியில் இந்திய அணி 12 ஓட்டங்களால் வெற்றி

by Staff Writer 19-01-2023 | 6:49 AM

Colombo (News 1st) நியூஸிலாந்து அணிக்கெதிரான முதலாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 12 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.

ஹைதராபாத்தில் நடைபெற்ற இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி, 50 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்களை இழந்து 349 ஓட்டங்களை பெற்றது.

மிகச் சிறந்த துடுப்பாட்டத்தை வௌிப்படுத்திய இந்திய வீரர் சுப்மன் கில் 149 பந்துகளில் 208 ஓட்டங்களை பெற்று போட்டியின் ஆட்டநாயகன் விருதை தன்வசப்படுத்தினார்.

அணித்தலைவர் ரோஹித் சர்மா 34 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார்.

350 என்ற வெற்றியிலக்குடன் களமிறங்கிய நியூஸிலாந்து அணி, 49.2 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 337 ஓட்டங்களை பெற்று தோல்வியை தழுவியது.