புதைக்கப்பட்டிருந்த மண்ணெண்ணெய் பீப்பாய்கள் மீட்பு

புதுக்குடியிருப்பில் புதைக்கப்பட்டிருந்த மண்ணெண்ணெய் பீப்பாய்கள் பொலிஸாரால் மீட்பு

by Staff Writer 21-06-2022 | 3:31 PM
Colombo (News 1st) முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு, உடையார்கட்டு பகுதியில் புதைக்கப்பட்டிருந்த நிலையில், மண்ணெண்ணெய் பீப்பாய்கள் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன. காணியை துப்பரவு செய்தபோது பீப்பாய்கள் இருந்ததைக் கண்ட நில உரிமையாளர்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர். கடந்த மாதம் பொலிஸாருக்கு தகவல் கிடைத்ததை அடுத்து, நீதிமன்ற உத்தரவு பெறப்பட்டு, முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி T.சரவணராஜா முன்னிலையில் நேற்றைய தினம் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டதாக புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்தனர். இதன்போது, 7 மண்ணெண்ணெய் பீப்பாய்கள் தோண்டியெடுக்கப்பட்டுள்ளதோடு, அவற்றில் மண்ணெண்ணெய் இருக்கின்றமை உறுதி செய்யப்பட்டது. 715 லிட்டர் மண்ணெண்ணெய் பீப்பாய்களில் இருந்து மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். அவை இன்று முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் ஒப்படைக்கப்படவுள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிஸார் குறிப்பிட்டனர். யுத்த காலத்தில் இந்த பீப்பாய்கள் புதைக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.