50,000 எரிவாயு சிலிண்டர்கள் இன்று(31) சந்தைகளுக்கு

50,000 எரிவாயு சிலிண்டர்கள் இன்று(31) சந்தைகளுக்கு விநியோகம்

by Staff Writer 31-05-2022 | 7:38 AM
Colombo (News 1st) 50,000 சமையல் எரிவாயு சிலிண்டர்களை இன்று(31) சந்தைகளுக்கு விநியோகிக்கவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. எனினும், வழமைபோன்று எரிவாயு விற்கப்படும் அனைத்து விற்பனை நிலையங்களிலும் எரிவாயுவை பெற்றுக்கொள்ள முடியாது என நிறுவனம் தெரிவித்துள்ளது. எரிவாயுவை ஏற்றிய மற்றுமொரு கப்பல் நேற்று(30) நாட்டை வந்தடைந்ததாக லிட்ரோ நிறுவன தலைவர் விஜித ஹேரத் தெரிவித்தார். அந்தக் கப்பலில் 3,950 மெட்ரிக் தொன் எரிவாயு அடங்கியுள்ளதாக அவர் கூறினார். குறித்த கப்பலிலிருந்து எரிவாயுவை இறக்கும் பணிகள் நேற்று(30) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மேலும் 2,500 மெட்ரிக் தொன் எரிவாயுவை ஏற்றிய மற்றுமொரு கப்பல், இவ்வார இறுதியில் நாட்டை வந்தடையவுள்ளது. எரிவாயு விற்பனை நிலையங்கள் இதோ...