வீடொன்றிலிருந்து ஆணின் சடலம் மீட்பு

நுவரெலியாவில் வீடொன்றிலிருந்து ஆணின் சடலம் மீட்பு

by Staff Writer 25-12-2021 | 5:26 PM
Colombo (News 1st) நுவரெலியா - பீட்ரூ தோட்டத்தில் ஒருவர் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளார். இன்று (25) காலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் கூறினர். பீட்ரூ தோட்டத்தை சேர்ந்த 44 வயதான ஒருவரே இவ்வாறு தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளார். உயிரிழந்தவரின் சடலம் நுவரெலியா பொது வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது. கொலைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என பொலிஸார் கூறினர். சம்பவம் தொடர்பில் நுவரெலியா தலைமையக பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.